தொண்டியில் உலக மனநல தினத்தை சட்ட விழப்புணர் முகாம்

திருவாடானை தாலுகா தொண்டியில் மனநரம் பாதிக்கப்பட்ட காப்பகத்தில் உலக மனநலம் தினத்தினை முன்னிட்டு இலவச சட்ட உதவி முகாம் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, தொண்டியில் உள்ள அன்பாலயா மன நலம் குன்றியோர் காப்பகத்தில் உலக மனநலம் குன்றியோர் தினத்தினை முன்னிட்டு வியாழக் கிழமை திருவாடானை நீதிபதி பாலமுருகன் தலைமையில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் மணநலம் குன்றியோர்களுக்கு நீதிபதி இனிப்புகளை வழங்கி சிறப்பித்தார். அங்கு வந்திருந்த மனநலம் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தார்களிடைளே நீதிபதி இலவச சட்ட உதவிகளை பற்றி எடுத்துரைத்தார். உடன் வழக்கறிஞாகள் தனபால், ராம்குமார் கவலந்து கொண்டார்கள். நிழச்சி ஏற்பாடுகளை வட்ட சட்ட பணிகள் குழ தன்னார்வலர் கோட்டைச்சாமி ஏற்பாடு செய்திருந்தார்.


Leave a Reply