திருவாடானை அருகே குப்பை நிரம்பி சுதாரக் கேடு, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திருவாடானை அருகே குப்பை தொட்டி நிரம்பி சுகாதார கேடு ஏற்படுபடுகிறது. சுத்தம் செய்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்தார்கள்.ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, கோடனூர் ஊராட்சிக்குட்பட்ட கிளியூர் கிராமத்தில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் குப்பைதொட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்த குப்பை தொட்டியில் கொட்டப்படும் குப்பைகளை ஊராட்சி நிர்வாம் சார்பில் அள்ளுவதே இல்லை.

 

இதனால் இப்பகுதியில் சுகாதார கேடு ஏற்படுகிறது. அள்ளப்படாத குப்பைகளில் கொசுக்கள் உற்பத்தி ஆகி இரவில் தூங்கமுடியவில்லை என்றும் நாளாக நாளாக பகலிலும் கொசு கடிக்க ஆரம்பித்துவிட்டது என்று இப்பகுதி மக்கள் தெரிவித்தார்கள். எனவே ஊராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்கள்.


Leave a Reply