இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே கே.கே.பட்டினத்தைச் சேர்ந்தவர் ருத்ரகுமார், 42. இவர் வீட்டில் வெடி பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து ருத்ரகுமார் வீட்டை தொண்டி காவல் சார்பு ஆய்வாளர் சித்தன், தலைமையில் போலீசார் சோதனை செய்தனர். அவரது வீட்டின் முதல் தளத்தில் பதுக்கி வைத்திருந்த தலா 20 ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர்கள், 4 மீட்டர் வயர் ஆகியவற்றை பறிமுதல் செய்து, ருத்ரகுமாரை கைது செய்தனர்.