மாமல்லபுரத்தில் முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு!இன்று சீன அதிபர் வருகை

இன்று மாமல்லபுரத்திற்கு பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபரும் வருகை தர உள்ளனர். அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு செய்தார். சென்னையில் இருந்து மாமல்லபுரம் வரை சென்ற முதலமைச்சர் பழனிசாமி அங்கிருக்கும் சுற்றுலா மாளிகையில் சிறிது நேரம் ஓய்வு எடுத்தார்.

 

பின்னர் மாமல்லபுரத்தில் இருக்கும் அர்ஜுனன் தபசு 5 ரகம் பகுதிகளில் செய்யப்பட்டிருக்கும் பாதுகாப்பு மற்றும் நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆய்வு செய்தார் தொடர்ந்து கடற்கரை கோவிலுக்கு சென்ற முதலமைச்சர் அங்கு செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடுகளையும் பார்வையிட்டதோடு அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகளையும் வழங்கினார்.

சுமார் அரை மணி நேரத்துக்குப் பிறகு முதலமைச்சர் பழனிசாமி சென்னைக்கு திரும்பினார். இந்த ஆய்வின்போது அமைச்சர் பழனிசாமியுடன் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அமைச்சர்கள் தங்கமணி, விஜயபாஸ்கர், காமராஜ் தலைமை செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


Leave a Reply