மதுவுக்கு அடிமையானதை ஒப்புக்கொண்ட ஸ்ருதிஹாசன்
ஈஷா யோகா மையத்தின் காவிரி கூக்குரல் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கோவை ஈஷா மையத்தில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் வளாகத்தில் மரக்கன்று நட்டார். பின்னர் மாணவர்களுடன் இணைந்து நாற்றுகள் வளர விதைகளை ஊன்றினார் அதன்பின்பு செய்தியாளரிடம் பேசிய நடிகை கங்கனா ரனாவத் மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிப்பதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள உறவு பலு பெற்றதாக குறிப்பிட்டுள்ளார்.

ஜெயலலிதா பல்வேறு போராட்டங்களை தன் வாழ்வில் சந்தித்த அதுபோலவே தனது வாழ்வில் இருப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால் அரசியலில் ஈடுபடும் எண்ணம் தனக்கு இல்லை எனவும் தெளிவுபடுத்தியுள்ளார்.
நடிகர் கமலஹாசனின் மகனுமான நடிகையுமான ஸ்ருதி ஹாசன் தற்போது நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு ஸ்ருதிஹாசன் அளித்த பேட்டியில் ஒரு காலத்தில் அவர் விஸ்கிக்கு அடிமையாக இருந்ததாகவும் இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனால் தான் சினிமாவில் இருந்து கொஞ்சகாலம் விலைக்கு இருந்ததாகவும் ஒப்புக்கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




