சாலையில் நின்று கொண்டிருந்த வாகனங்களுக்கு பெட்ரோல் ஊற்றி தீ

மயிலாடுதுறையில் சாலையில் நின்று கொண்டிருந்த வாகனங்களை மர்ம நபர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். மயிலாடுதுறையில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மற்றும் சரக்கு வாகனம் ஆகியவை இன்று அதிகாலை திடீரென தீப்பிடித்து எரிந்தது தகவலறிந்து சென்ற அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்தனர்.

 

தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில் அதே பகுதியை சேர்ந்த ராமன் என்பவர் வாகனங்களுக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்தது தெரியவந்தது. இதையடுத்து வாகன உரிமையாளர்கள் அளித்த புகாரின் பேரில் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Leave a Reply