சீன அதிபருக்கு கொடுக்கப்படும் விருந்தில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்கிறார் நாளை தமிழகம் வரும் சீன அதிபர் ஜீ ஜின்பிங் இற்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாமல்லபுரத்தில் சீன அதிபருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துவது உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. சீன அதிபரை கவுரவிக்கும் வகையில் பிரதமர் மோடி அவருக்கு சிறப்பு விருந்து அளிக்க ஏற்பாடு செய்துள்ளார்.
இந்த விருந்தில் முக்கிய தலைவர்கள் அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளன விருந்தில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்திற்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. அழைப்பிதழை ஏற்று நடிகர் ரஜனிகாந்த் இந்த விருந்தில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.