இரு கைகளாலும் ஒரே நேரத்தில் 3 மொழிகள் எழுதி அசத்தும் கல்லூரி மாணவி

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவி ஒருவர் இரண்டு கைகளாலும் மூன்று மொழிகளில் எழுதியும் ஓவியங்கள் வரைந்து அசத்தியுள்ளார். பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் சேர்ந்த செந்தில்வேல் செல்பி தம்பதியினரின் மகளான தனு வரிசை தனியார் கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு நுண்ணுயிரியல் பயின்று வருகிறார்.தனது 6 வயதில் இரு கைகளாலும் தனித்தனியாக எழுதத் தொடங்கிய தனு வர்ஷா.

 

அதன்பின்னர் ஒரே நேரத்தில் இரு கைகளாலும் எழுத பயிற்சி எடுத்துள்ளார் தமிழ் ஹிந்தி ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் இருகைகளால் ஒரே நேரத்தில் எழுதுகிறார் தனு வர்ஷா அதேபோல் அழகான ஓவியங்களையும் இருகைகளால் வரைகிறார். அவர் மகளின் இந்த திறமையை அவரது பெற்றோர் ஊக்குவித்து வரும் நிலையில் தனது திறமையை இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் இல் இடம்பெற வைக்க விண்ணப்பித்துள்ளார்.


Leave a Reply