மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த 2 இளைஞர்கள் கைது

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த 2 இளைஞர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். 12 வயது சிறுமி அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் மாணவி தனது தந்தையுடன் விவசாய நிலத்திற்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பும்போது அதே கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் மற்றும் ரமேஷ் ஆகியோர் அவரிடம் நைசாக பேச்சு கொடுத்து உள்ளனர்.

 

பின்னர் இருவரும் மாணவியை ஊருக்கு ஒதுக்குப்புறமாக மரங்கள் அடர்ந்த பகுதிக்கு வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது .மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் இரு இளைஞர்களையும் போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.


Leave a Reply