சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் இரவு காட்சிக்கு சென்றவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த தியேட்டரில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள படம் பத்து நிமிடங்களுக்கு முன்னதாக திரை இடப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் முதலிலிருந்து படத்தை ஒளிபரப்ப கோரிக்கை வைத்த போதிலும் ஆடியோ பிரச்சினை ஏற்பட்டதால் அவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
டிக்கெட் கட்டணத்தை திரும்ப அளிப்பதாகவும் ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்களுக்கு கட்டணம் திருப்பி அளிக்கப்படும் எனவும் நிர்வாகம் உறுதி அளித்ததை அடுத்து ரசிகர்கள் கலைந்து சென்றனர். ரசிகர்களின் போராட்டம் காரணமாக திரையரங்கிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.