தமிழகத்தில் இலவசமாக வழங்குவதற்காக மேலும் 10 லட்சம் செட்டாப்பாக்ஸ் கொள்முதல் செய்யப்பட உள்ளதாக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அரசு நிர்ணயித்த 154 மட்டுமே கேபிள் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.முதற்கட்டமாக இதில் 25 லட்சம் செட்டாப் பாக்ஸ் தலைக்கு மேலே சென்று விட்டது ஏறத்தாழ 26 லட்சத்தை தொட உள்ளது. இன்னும் பத்து லட்சம் பாக்ஸ்களை கொடுக்க இருக்கின்றோம்.
எனவே அனைத்து பகுதிகளிலும் வழங்குவதற்கும் முதல்வர் ஒரு ஆய்வுக் கூட்டத்தை நடத்தி எந்தெந்த பகுதிகளில் இன்னும் நமது அரசு கேபிள் செட் அப் பாக்ஸ் கொடுக்க வேண்டும் என்பதை ஆய்வு செய்து உடனடியாக கொடுக்க வேண்டுமென்று கூறியிருக்கின்றனர் என்று தெரிவித்துள்ளார். அதற்கான பணிகளை விரைவில் செயல்படுத்தவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.