--- --:--:-- --

நடிகை நிலானிக்கு செல்போனில் ஆபாசமாக பேசி மிரட்டல்

download

சின்னத்திரை நடிகை நிலானி செல்போனில் ஆபாசமாக பேசி மிரட்டிய புகாரில் அவர் நண்பர் கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து போலீஸ் உடையில் ஆடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை நிலானி. இவர் சென்னையை அடுத்த போரூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.

 

கணவரை விட்டு பிரிந்து தனியே வாழும் நிலையில் அவரது நெருங்கிய நண்பரான காற்றாடியை சேர்ந்த மஞ்சுநாதன் செல்போனில் ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து நடிகை நிலானி கொடுத்த புகாரின் பேரில் காவல் நிலைய போலீசார் மஞ்சுநாதன் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon