ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மானிய விலையில் பெண்களுக்கு அம்மா இரு சக்கர வாகனம் வழங்குவதற்கான விண்ணப்பங்களை பெற அங்குள்ள அலுவலக லஞ்சம் வாங்கும் காட்சி வைரலாகி வருகிறது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் குருவிகுளம் ஊராட்சியை சேர்ந்த பட்டதாரி இளம்பெண் ராஜலட்சுமி மானிய விலையில் அம்மா இரு சக்கர வாகனம் பெற முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை அணுகியுள்ளார்.
அங்குள்ள முதுநிலை உதவியாளர் மாரிமுத்து 300 ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது இதனால் அதிர்ச்சி அடைந்த விண்ணப்பதாரர் ராஜலட்சுமி பின்னர் தனது சகோதரர் உதவியுடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சென்று மாரிமுத்து கேட்டபடி அதனைே வீடியோவாக பதிவு செய்து மாவட்ட ஆட்சியருக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பியுள்ளார். பின்னர் வீடியோவை சமூக வலைத் தளங்களிலும் பதிவிட்டுள்ளார் அவரிடம் 300 ரூபாய் லஞ்சம் கொடுத்துள்ளார் தற்போது அந்த வீடியோ ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் வைரலாகி வருகிறது.