புதுச்சேரி தவளை குப்பத்தில் கடை ஒன்றின் திருடச் சென்ற கொள்ளையர்கள் சர்க்கரை திறக்க முடியாததால் வெளியிலிருந்து ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானத்தை சாப்பிட்டு விட்டு தப்பிச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. தவலகுப்பம் மெயின் ரோட்டில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடியில் கொள்ளையடிப்பதற்காக வடமாநில இளைஞர்கள் நான்கு பேர் உள்ளே நுழைந்துள்ளனர்.
கடையின் ஷட்டரை திறக்க நீண்ட நேரமாக முயற்சித்தும் திறக்க முடியவில்லை. இதனால் ஏமாந்த கொள்ளையர்கள் வெளியே குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ஐஸ்கிரீமை சாப்பிட்டுவிட்டு குளிர்பானங்களை குடித்தும் கொண்டிருந்தனர். பின்னர் சிசிடிவி கேமரா இருப்பதை தெரிந்து கொண்டவர்கள் முகத்தை மறைத்துக்கொண்டு கேமராவை உடைத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.