புதுக்கோட்டை அருகே 16 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த ரமேஷ்குமார் என்பவர் கடந்த 2014ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து சுரேஷ் குமாரை போக்கு சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர் இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வியாழனன்று நடந்த இறுதி கட்ட விசாரணை என்பது குற்றவாளிகள் சுரேஷ்குமாருக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி மகளிர் நீதிமன்றம் நீதிபதி இராஜலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.






