6வது மாதத்தில் 600 கிராம் எடையில் பிறந்த ஆண் குழந்தை

ஈரோட்டில் மிகக் குறைந்த எடையுடன் 6 மாதத்திலேயே பிறந்த குழந்தைக்கு மூன்று மாத காலம் மருத்துவ நடித்த தொடர் சிகிச்சை காரணமாக 2 கிலோ 200 கிராம் எடையுடன் அந்த குழந்தை தற்போது அதன் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தாராபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ராஜ்குமார் பானுப்பிரியா தம்பதியினர் இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்து இறந்தன.

 

மேலும் இரண்டு குழந்தைகள் வயிற்றிலேயே இறந்து விட்டன. இதனால் இந்த தம்பதியினர் கடந்த 10 வருடங்களாக குழந்தை இல்லாமல் மனதளவில் அவதியுற்று வந்தனர். இந்தநிலையில் ஐந்தாவது முறையாக கருவுற்ற பிரியாவுக்கு ஆறாவது மாதத்திலேயே பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பானுப்பிரியாவின் அவரது குடும்பத்தினர் அனுமதித்தனர்.

 

அங்கு அவருக்கு அறுவை சிகிச்சையின் மூலம் 600 கிராம் எடையில் ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. மிகவும் குறைவான எடையில் குழந்தை பிறந்ததால் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த குழந்தை சுமார் மூன்று மாதத்தில் இரண்டு கிலோ 200 கிராம் எடையுடன் பானுப்பிரியா ராஜ்குமார் தம்பதியினரிடம் தற்போது ஒப்படைக்கப்பட்டுள்ளது.

 

இது குறித்து குழந்தைக்கு தொடர் சிகிச்சை அளித்த மருத்துவர் செய்தியாளரிடம் பேசுகையில் முதலுதவி சிகிச்சை தொடர்ந்து மேற்கொள்ளும் சிகிச்சைகள் சரியான நேரத்தில் வழங்கப்பட்டால் இதுபோன்ற குழந்தைகளை காப்பாற்றலாம் என தெரிவித்தார்.


Leave a Reply