இராமநாதபுரத்தில் பகத்சிங் 113வது பிறந்த தினம் அனுசரிப்பு !

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இராமநாதபுர நகர் ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இராமநாதபுரம் நகர் ஒன்றிய குழு கூட்டம் தியாகிகள் இல்லத்தில் மாதவனூர் நாகராஜன் தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் பகத்சிங் 113வது பிறந்த தின அனுசரிப்பு நிகழ்ச்சி அவருடைய படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

 

பின்பு நடைபெற்ற கூட்டத்தில் அரசியல் அறிக்கையை மற்றும் மாவட்ட குழு முடிவுகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினரும் அனைத் திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாவட்டத் தலைவர் என் .ஏ .காதர் பேசியதாவது; கூட்டத்தில் வரும் அக்டோபர் 15ஆம் தேதி இராமநாதபுரம் தலைநகரில் உள்ள மருத்துவமனையில் செயல்படாமல் இருக்கக்கூடிய ஸ்கேன் மிஷின் உடனடியாக செயல்படுத்தவும் பற்றாக்குறை உள்ள மருத்துவர்களை நியமிக்க வேண்டும் .புறநோயாளிகளை போதிய கவனத்துடன் பார்க்க வேண்டும் அதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

மேலும் மழைக்காலம் தொடங்கி உள்ளதால் கண்மாய்கள் அனைத்தும் சீர் படுத்தப்பட்டு நீர் நிரப்பப்பட வேண்டும் மேலும் பயிர் இன்சூரன்ஸ் வழங்காதவர்களுக்கு உடனடியாக வழங்கக் கோரியும் லேப்-டாப் வழங்காத பள்ளி மாணவ மாணவிகளுக்கு முழுவதும் சரியாக வழங்கிட கோரியும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து அரண்மனை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் இராமநாதபுரம் நகர் வட்டார செயலாளர் களஞ்சியம் மாணிக்கம் செல்வராஜ் மாடசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் அரசியலமைப்பு நிலைகளை விளக்கி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.முருகபூபதி உரையாற்றினார் இறுதியில் ராஜாமணி நன்றி கூறி முடித்து வைத்தார்.


Leave a Reply