கோவை சி.எஸ்.ஐ., பிஷப் அப்பாசாமி கலை அறிவியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் 640 மாணவ,மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.சி.எஸ்.ஐ. பிஷப் அப்பாசாமி கலை, அறிவியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழா சி.எஸ்.ஐ.,ஆல்சோல்ஸ் சர்ச் அரங்கில் நடைபெற்றது.சி.எஸ்.ஐ.பேராயர் திமோத்தி ரவீந்தர் தலைமையில் நடைபெற்ற விழாவில் கல்லூரி முதல்வர் ஜெமிமா வின்ஸ்டன் அனைவரையும் வரவேற்று பேசினார் .

சிறப்பு விருந்தினராக நாக் கமிட்டியின் இயக்குனர் பொன்முடி ராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது,பேசிய அவர் வாழ்க்கைத் தரம் முன்னேற மாணவர்கள் எப்போதும் உண்மையாக இருக்க வேண்டும் எனவும், கல்வி கற்பதோடு மாணவ,மாணவிகள் பன்முகத்தன்மையை அதிகம் வளர்த்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.தொடர்ந்து அவர் மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

இதில் பல்கலைக்கழக அளவில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற 15 மாணவ மாணவிகளுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து 640 மாணவ மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப் பட்டது. விழாவில் கோவை மறைமாவட்ட முன்னாள் பிஷப் வில்லியம் மோசஸ், கல்லூரி செயலர் மிருணாளினி டேவிட் உட்பட மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.






