மற்றொரு நீட் ஆள் மாறாட்டம் – தலைமறைவான மாணவர் மொரீஷியஸ்-க்கு தப்பியோட்டம்?

நீட் தேர்வில் மோசடி செய்ததாக தேடப்பட்டு வரும் இர்ஃபான் தலைமறைவாகி விட்ட நிலையில் அவருடைய தந்தை வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் கைது செய்யப்பட்டுள்ளார். அரசு மருத்துவமனை ஒன்றில் பயின்று வந்த மாணவர் இர்ஃபான் நீட் தேர்வில் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்த விசாரணையில் தந்தை முகமது சபி சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

 

நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற இர்ஃபான் அதிக மதிப்பெண் எடுத்தது போல் காண்பித்து மோசடி செய்ததாக கூறப்படுகிறது. மகனை மருத்துவராக்க வேண்டும் என்ற ஆசையை இவரை செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. விவகாரம் வெளியானதால் கல்லூரியில் படித்தால் மொரிசியஸ் நாட்டிற்கு தப்பி சென்றதாக கூறப்படுகிறது. மொரிஷியஸ் சென்று அவரை கைது செய்து அழைத்து வருவது குறித்து சிபிசிஐடி அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.


Leave a Reply