சுகாதார சீர்கேட்டில் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை

தஞ்சை மாவட்டம் மட்டுமல்ல புதுக்கோட்டை, திருவாரூர் ,நாகப்பட்டினம் ,ராமநாதபுரம் எனப் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மக்களுக்கு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நோய் நீக்கும் அரணாக செயல்படுகிறது.

 

ஸ்ட்ரெச்சரில் நோயாளியை வைத்து தள்ளுபவர், வாட்ச்மேன் என மருத்துவர்களை தவிர அனைத்து பணியாளர்களுக்கும் லஞ்சம் கொடுத்தால்தான் வேலையாகும் என்கிற நிலையில் உள்ளது.

தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை
தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை

வேறுவழியில்லாமல் இதையெல்லாம் சகித்துக்கொண்டு எப்படியாவது நோய் நோக்கி நிவாரணம் பெற்றால் போதும் என்ற நிலையில் இருக்கக்கூடிய பொதுமக்கள் சந்திக்கக்கூடிய அடுத்த பிரச்சினை சுகாதாரப் பிரச்சினை.

 

மருத்துவமனை வளாகத்திலேயே கட்டணக் கழிப்பறை இருக்கிறது. இதன் ஏழதாரர்களிடம் கள்ளத்தனமாக டீல் பேசி உறவு வைத்துக் கொண்டு மருத்துவமனை சுகாதார ஊழியர்கள், மருத்துவமனையின் உள் பகுதியில் இருக்கக்கூடிய அத்தனை கழிவறைகளும் சுத்தம் செய்யப்படாமல் வியாதிகளிலிருந்து நிவாரணம் பெற வருபவர்களுக்கு நோய்களை அள்ளிக் கொடுக்கிறது. கழிவறைக்கு கதவு, லைட் கிடையாது.

 

தினசரி அல்ல,மாதத்திற்கு ஒரு முறை கூட சுத்தம் செய்வது கிடையாது. வேறு வழியில்லாமல் நோயாளிகளும், நோயாளிகளுக்கு துணை இருப்பவர்களும் இதையே பயன்படுத்த வேண்டிய கட்டாயம் சில நேரம் அமைந்து நோய்த் தொற்றுக்கும் வழிவகை செய்து கொடுக்கிறது.

சுகாதார சீர்கேட்டில் கழிப்பறை
சுகாதார சீர்கேட்டில் கழிப்பறை

பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நபர்கள் மருத்துவமனை டீன் அவர்களிடம் நேரில் கோரிக்கை வைத்தும் நல்லது நடக்கவில்லை.

 

தூய்மை இந்தியா என்ற பினாத்திக்கொண்டிருக்கும் இந்திய அரசும், மக்களின் அல்லல் போக்கும் இது அம்மாவின் அரசு என்று மார்தட்டிக் கொள்கிற பழனிச்சாமி அரசும் குறைந்தபட்சம் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.


Leave a Reply