பட்டுக்கோட்டை பஸ் ஸ்டாண்டில் பலி வாங்க காத்திருக்கும் செல்போன் டவர் ..!

பலநூறு கிராமங்களை சுற்றிலும் கொண்ட மிகப்பெரிய நகரம் பட்டுக்கோட்டை. இந்த நகரத்தை கடும் சேதத்துக்கு உள்ளாக்கிய கஜா புயல் வந்து ஒரு வருடம் ஆகப்போகிறது.

 

கஜா புயல் அடித்த நேரத்தில் பேருந்து நிலைய வளாகத்திற்கு வெளியே இருந்த செல்போன் டவர் அவசர தேவைக்காக பேருந்து நிலைய வளாகத்துக்குள் வைக்கப்பட்டது. நகராட்சி மற்றும் அரசு அதிகாரிகளும் கஜா புயலின் தாக்கத்தால் பல சிரமங்களுக்கு உள்ளாகியிருக்கும் பொது மக்களின் தேவைக்காக அனுமதித்தனர்.

கஜா புயல் அடித்து ஒரு வருட காலம் ஆகப் போகிறது,ஆனால் இன்னமும் அந்நிறுவனம் டவருக்கான மாற்று ஏற்பாடுகளை செய்ய வில்லை., ஏற்கனவே போக்குவரத்து சிரமங்களால் மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் பட்டுக்கோட்டை நகரம் மற்றும் பொதுமக்கள் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள செல்போன் டவரால் மிகவும் அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

 

மிகவும் குறுகலான பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் ஏராளமான அரசு மற்றும் தனியார், ஆம்னி பேருந்துகளை நூற்றுக்கணக்கில் சந்தித்து வருகிறது.

 

இந்த டவர் பேருந்து நிலையத்தில் நிலைய பகுதியில் இருப்பதால் பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் துயரங்களை சந்தித்து வருகிறார்கள்.

 

மிகப்பெரிய விபத்துக்களை மற்றும் உயிரிழப்புகளை ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்த டவர் இருக்கிறது.

இதுபற்றி நகராட்சி அலுவலர்களிடம் நாம் விசாரித்தபோது… நாங்கள் பலமுறை எடுக்கச் சொல்லி அந்த நிறுவனத்திடம் கூறி விட்டோம். அப்போதெல்லாம் எங்களுக்கு அரசியல்வாதிகளிடம் இருந்து நெருக்கடிகள் வருகிறது என்றனர்.

 

பெயர் சொல்ல விரும்பாத நகராட்சி ஊழியர் ஒருவர் நம்மிடம்.,
நிச்சயமாக மக்கள் போராட்டம் வெடித்தால் தான் இந்த டவர் அப்புறப்படுத்தப்படும் அதை விட்டால் வேறு வழியில்லை என ஆதங்கத்துடன் தெரிவித்தார்.


Leave a Reply