அழகிய ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார் ஏமி ஜேக்சன்
நடிகை எமிஜாக்சன் அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். தமிழில் மதராசப்பட்டினம் படத்தில் துரையம்மா கதாபாத்திரத்தில் அறிமுகமான எமி ஜாக்சன் ஐ, தெறி,2.0 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர். ஜார்ஜ் என்பவரை காதலித்து வரும் எமி ஜாக்சன் கடந்த மார்ச் மாதம் தான் கர்ப்பிணியாக இருப்பதாக அறிவித்தார். கடந்த மே மாதம் இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் கர்ப்ப காலத்தின் அழகிய தருணங்களை அவ்வப்போது படம் பிடித்து தனது சமூக வலைதளப் பக்கங்களில் எமிஜாக்சன் வெளியிட்டு வந்தார்.

கடந்த மாதம் தனக்கு பிறக்கப் போவது ஆண் குழந்தை என அறிவித்து ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார் .குழந்தை மற்றும் வருங்கால கணவரோடு எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட எமி ஜாக்சன் தற்போது ஹாய் வேர்ல்டு என்று தனது குழந்தை கூறுவது போன்ற பூமராங் வீடியோவை வெளியிட்டுள்ளார். குழந்தை உறக்கத்தில் நெளியும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன குழந்தையும் ஜார்ஜும் என பெயரிட்டுள்ளனர் ஆன்ட்ரியாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




