2 மாம்பழங்களை திருடியவருக்கு ரூ.96,000 அபராதம்

துபாய் விமான நிலையத்தில் பயணிகளின் உடைமைகள் இருந்து இரண்டு மாம்பழங்களை திருடிய இந்திய ஊழியருக்கு 96 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த தோடு கூடியவரை நாடு கடத்த வேண்டும் என அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. துபாய் விமான நிலையத்தில் இந்திய தொழிலாளி ஒருவர் பணிபுரிந்து வந்துள்ளார்.

 

பயணிகளின் உடைமைகளை விமானத்திலிருந்து கண்டெய்னரில் ஏற்றுவது மற்றும் இறக்குவது தொடர்பான பணிபுரிந்து வரும் இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இரண்டு மாம்பழங்களை பயணிகளின் உடைமைகள் இலிருந்து திருடியுள்ளார். இது தொடர்பாக கைது செய்யப்பட்ட அந்த தொழிலாளி தனக்கு தண்ணீர் தாகம் அதிகமாக எடுத்ததாகவும் அதன் காரணமாகவே அந்த இரண்டு மாம்பழங்களை திருடியதாக நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார்.

 

இதையடுத்து பயணிகளின் உடமைகள் இருந்து இரண்டு மாம்பழங்களை திருடிய இந்திய தொழிலாளிக்கு இந்திய ரூபாய் மதிப்பின் படி 96 ஆயிரத்து 400 ரூபாய் அபராதம் விதித்த தோடு அவரை நாடு கடத்த வேண்டும் என அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.


Leave a Reply