புதிய வாகனங்கள் வாங்க மத்திய அரசின் துறைகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது . ஆட்டோமொபைல் துறையானது மிகப்பெரிய அளவில் சரிவை சந்தித்து வருகிறது. இதனை சரி செய்வதற்காக பல்வேறு முயற்சிகளை மத்திய அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக மத்திய அரசின் துறைகள் மற்றும் இலாகா புதிய வாகனங்களை வாங்க விதிக்கப்பட்டிருந்த தடையை தற்போது மத்திய அரசு நீக்கியுள்ளது.
மத்திய நிதித்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்க கூடிய துறைகள் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக மத்திய அரசின் அனைத்து துறைகளும் அதாவது ஒரு சாதாரண ஊழியருக்கு வாகனம் தேவைப்படுகிறது என்றால் அதை வாங்கிக்கொள்ளலாம். ஏற்கனவே கடந்தகாலம் நிதி பற்றாக்குறை காரணமாகவும் செலவினங்களை குறைக்க வேண்டும் என்ற நோக்குடன் இந்த புதிய வாகனங்களை வாங்குவதற்கான தடையானது விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.
எனவே ஆயிரக்கணக்கான வாகனங்கள் புதிதாக வாங்குவதற்கான வாய்ப்பு இதன்மூலம் உருவாகியுள்ளது. முக்கியமாக பார்க்கவேண்டியது நிர்மலா சீதாராமன் அவர்கள் இதை முக்கியமான கருத்தாக கூறியிருந்தார். அமைச்சர்கள் மட்டுமல்ல பொதுமக்களும் புதிய வாகனங்களை வாங்கும் முன் வர வேண்டும் என்ற கோரிக்கையை அவர் வைத்திருந்தார். இது முதற்கட்டமாக ஏற்கனவே வாகனங்களை வாங்குவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.
பழைய வாகனங்களை மாற்றி புதிய வாகனங்கள் வாங்க வேண்டும் என்று ஒவ்வொரு அமைச்சகமும் முடிவெடுத்துக் கொண்டாள் அதன் கீழ் அதனை வாங்கிக் கொள்ளலாம் என்று குறிப்பிட்டு உள்ளனர். இது இந்த ஆட்டோமொபைல் துறையை ஊக்குவிப்பதற்காக ஒரு முதற்படியாக தான் பார்க்கப்படுகிறது. ஆனாலும் இது பொதுமக்களின் வரிப்பணத்தில் இருந்து தான் இருக்கிறது என்பது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
அமைச்சகங்களுக்கு கீழ் இயங்க கூடிய வாகனங்களை மாற்றுதல் அல்லது புதிய வாகனங்கள் வாங்குதல் என்பது எந்த அளவிற்கு சரிந்து கிடைக்கக்கூடிய ஆட்டோமொபைல் துறையை மீட்டெடுக்கும் என்ற கேள்வி எழுகிறது. ஏற்கனவே இதுதொடர்பாக பொருளாதார வல்லுனர்களும் சரியான விமர்சனங்களை வைத்துள்ளனர்.