உப்பூர் அனல் மின்நிலையம் பணிகள் நடந்து வரும் நிலையில் அதற்கு மீனவ மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர்.ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா உப்பூரில் பல கோடி ரூபாய் செலவில் சீரிய திட்டமான அனல் மின் நிலையம் அமைக்க ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த அனல் மின் நிலையத்திற்கு தண்ணீர் தேவைக்காக தரைப்பகுதியில் இருந்து கடல் பகுதி ஒரு கிலோ மீட்டர் நீள அளவில் ஒரு நீண்ட பாலம் கட்டப்படுகிறது.

அப்படி கட்டினால் அப்பகுதியில் வாழும் மீனவ மக்களுக்கு தங்கள் படகுகளை கொண்டு செல்வதில் பெரும் சிக்கல் இருக்கும் என்றும் அதனால் மீனவ மக்களின் வாழ்வாதாரம் முழுவதுமாக பாதிக்கப்படும் என்றும் இதுகுறித்து பலமுறை அனல்மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்தும் அதை செவி கொடுத்து கேட்காத நிலையில் ஆத்திரமுற்ற மோர் பண்ணை கிராம பொதுமக்கள் பெண்கள் ஆண்கள் என சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்து வருகிறார்கள்.






