வெளிமாநிலத்தவருக்கு ரயில்வே வேலை – வைகோ கண்டனம்

ரயில்வே துறை பணியாளர் தேர்வில் வெளிமாநில இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தைச் சேர்ந்த வேலையில்லா பட்டதாரிகள் பலர் இத்தேர்வில் கலந்து கொண்ட போதும் அவர்கள் தேர்ச்சி பெறவில்லை என தெரிவித்துள்ளார்.

 

அண்மையில் பொன்மலை ரயில்வே பணிமனையில் தொழிற்பயிற்சி தேர்விலும் தமிழகத்தை சேர்ந்த இளைஞர்கள் அடியோடு புறக்கணிக்கப்பட்டு வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே நியமனம் செய்யப்பட்டார்கள் என்றும் தற்போது வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் பலர் முகவர்கள் உதவியுடன் ரயில் பணிகளை பெற்றிருப்பது தெரிய வந்திருப்பதாகவும் தெரிவித்தார். தமிழ்நாட்டில் உள்ள ரயில்வே பணியிடங்களுக்கு தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கிறார்.


Leave a Reply