விபத்து ஏற்படுத்தாத ஓட்டுநர்களுக்கு ப்ரீமியம் தொகை குறைப்பு
ஓட்டுநரின் பின்னணி அடிப்படையில் காப்பீடு பிரீமியத்தை நிர்ணயிக்கும் முறையை விரைவில் காப்பீட்டு நிறுவனங்கள் அமல்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காப்பீட்டு பிரீமியம் தொடர்பாக பரிந்துரைக்க 9 நபர் குழுவை காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் அமைத்தது.
இந்த குழு தனது அறிக்கையை இரண்டு மாதங்களில் அளிக்க உள்ளது. ஓட்டுனர் மீதான வழக்குகள் ஏற்படும் விபத்துகள் வாகனம் ஓட்டும் கழகம் ஆகியவற்றின் அடிப்படையில் காப்பீட்டு பிரிமிய நிர்ணயிக்க இந்த குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி விபத்து ஏற்படுத்தாதா விதிகளை மதித்து வாகனம் ஓட்டுபவர்களுக்கு குறைவான பிரீமியம் நிர்ணயிக்கப்படும். விபத்து பின்னணி ஒழுங்கற்ற வாகன ஓட்டிகள் பழக்கம் கொண்டவர்களுக்கு பிரீமியம் பலமடங்கு அதிகமாகும் என்று தெரிகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




