சவால்களை சந்திப்பது எப்படி என்பது தெரியும்: பிரதமர் மோடி

அரசு எதிர் நோக்கியுள்ள சவால்களை சந்திப்போம் என்றும் அவற்றை சமாளிப்பது எப்படி என தெரியும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். ஹரியானாவில் அடுத்தமாதம் பேரவை தேர்தல் நடைபெற இருக்கும் வேளையில் ரோஹ்தக் நகரில் பிரதமர் நரேந்திர மோடி பரப்புரை மேற்கொண்டார்.

 

அப்போது பேசிய அவர் பாரதிய ஜனதா கட்சி இரண்டாவது முறை மத்தியில் ஆட்சிக்கு வந்த 100 நாட்கள் நிறைவு செய்துள்ளதை புரிந்துகொள்ளாத சிலர் விமர்சித்து வருவதாக கூறினார் மோசமான நிலையில் இருக்கும் சிலர் நாடாளுமன்ற தேர்தல் தோல்வியில் இருந்து மீள வில்லை எனவும் பிரதமர் மோடி பேசினார்.

 

இந்த மூன்று நாட்களில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் பின்னாளில் 130 கோடி மக்களுக்கு ஊக்கம் அளிக்கும் என்று அவர் நாடு எதிர்நோக்கியுள்ள சவால்கள் சமாளிப்பது எப்படி என்பது அரசுக்கு தெரியும் என்றும் ஆவேசத்துடன் பேசினார். ஜம்மு காஷ்மீர் லடாக் நிலவிவரும் தண்ணீர் பிரச்னையை தீர்க்க 130 கோடி மக்களும் உதவ வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.


Leave a Reply