--- --:--:-- --

மதுமிதா வெளியேற்றப்பட்டதற்கான காரணம்!

mathu-2

பிக்பாஸ் வீட்டில் இருந்து தான் வெளியேற்றப்பட்ட அதற்கான காரணத்தை முதன் முறையாக நடிகை மதுமிதா வெளிப்படுத்தியுள்ளார். பிக் பாஸ் வீட்டில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் கமலஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்த நடிகை மதுமிதா நிகழ்ச்சியின் விதியை மீறி செயல்பட்டதாக கூறி வெளியேற்றப்பட்டார். வெளியே வந்த அவர் தனக்கும் இன்னும் ஊதியம் வழங்கப்படவில்லை என கூற மதுமிதா தற்கொலை மிரட்டல் விடுப்பதாக தனியார் தொலைக்காட்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தது. அதனையடுத்து தனியார் தொலைக்காட்சிக்கு எதிராக நசரத்பேட்டை காவல்நிலையத்தில் மதுமிதாவும் புகார் அளித்தார்.

 

பத்திரிகையாளர்களை சந்திக்க கூடாது என மிரட்டல் விடுக்கப்பட்டதாக அவர் புகாரில் கூறியிருந்தார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மதுமிதா தனக்கு கொடுக்கப்பட்ட டாஸ்கின் போது காவிரி விவகாரம் தொடர்பாக தான் கூறிய கருத்து காரணமாகவே நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதாக குற்றம்சாட்டினர்.

 

கமல்ஹாசனுக்கு உள்ளே நடப்பது எதுவும் முழுமையாக தெரியவில்லை என குற்றம்சாட்டிய மதுமிதா முழுமையாக தெரிந்து கொண்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். 24 மணி நேரமும் நிகழ்ச்சியை கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon