திருப்பூரில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 17 பேர் கைது!!

திருப்பூர் பெருமாநல்லூர் ரேட்டில் உள்ள சாந்தி தியேட்டர் பின்புறம் உள்ள ஒரு தனியார் குடோனில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.இதை அடுத்து நேற்று இரவு திருப்பூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது. அங்குள்ள தனியார் கட்டடத்தில் ஒருகும்பல் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

 

இதையடுத்து அவர்களை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டபோது குடிபோதையில் இருந்த அந்தகும்பல் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவர்களை தாக்க முயன்றுள்ளனர்.

 

இதில் சுதாரித்துக்கொண்ட போலீசார் சூதாட்டத்தில் ஈடுபட்ட வீரக்குமார்(32) , சிவக்குமார்(36) உட்பட 17 பேரை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச்சென்ற விசாரனை மேற்கொண்டுவருகின்றனர் .அவர்களிடமிருந்து சூதாட்டத்திற்கு பயண்படுத்திய 67ஆயிரத்து 800 ரூபாய் பணம் மற்றும் 7டூ வீலர்களையும் பறிமுதல் செய்தனர்.


Leave a Reply