இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் மணிகண்டன் நேரில் சென்று ஆறுதல்

இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் பகுதி நடராஜபுரம் பகுதியைச் சேர்ந்த காந்தகுமார்,மதன், இலங்கேஸ்வரன், உமாகாந்த் ஆகியோர் புதிய படகினை வாங்கி கொண்டு சொந்த ஊர் கடல்வழியாக பயணிக்கும் போது எதிர்பாராத விதமாக கடலில் மூழ்கி இவர்களின் உயிர் பிரிந்தது. இதனால் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இராமநாதபுரம் சட்டமன்றத் உறுப்பினர் மற்றும் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் நேரில் சென்று ஆறுதல் கூறினார். மேலும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ஐம்பதாயிரம் ரூபாய் அவரது சொந்த நிதியில் வழங்கி மேலும், இதுகுறித்து தமிழக முதல்வரிடம் எடுத்துரைத்து நிவாரணம் நிதி கிடைக்க வழிவகை செய்வதாக கூறினார்.


Leave a Reply