ஒப்பந்த விதிமுறையை மீறியதாக வந்த புகாரை அடுத்து இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் தினேஷ் கார்த்திக் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளார். மேற்கிந்திய தீவுகளில் நடைபெறும் கரீபியன் 20 ஓவர் லீக் தொடரில் செப்டம்பர் 5-ஆம் தேதி நடைபெற்ற தொடக்க போட்டியின்போது அணியுடன் தினேஷ் கார்த்திக் இருந்துள்ளார். பிசிசிஐ அனுமதி பெறாமல் டி20 லிட்டில் பங்கேற்றதாக தினேஷ் கார்த்திக் மீது புகார் இருந்தது. இது குறித்து விளக்கம் அளிக்குமாறு தினேஷ் கார்த்திக்கு பிசிசிஐ தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த விவகாரத்தில் பிசிசிஐயிடம் மன்னிப்பு கோரிய தினேஷ் அணியுடன் இணைய மாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள் :
இளம் சென்சேஷனல் நடிகை மமிதா பைஜூவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!
புதுச்சேரியில் விற்பனையாகி வரும் 20 லிட்டர் தண்ணீர் கேன்களில் புழு, பூச்சி..!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை வென்றது இந்திய அணி..!
பிலிப்பைன்சில் புரட்டிப்போட்ட புயலால் 188 பேர் பலி..!
கலப்பட நெய் விநியோகம்: ரசாயனம் சப்ளை செய்தவர் கைது
13% மசோதாக்கள் ஜனாதிபதிக்கு அனுப்பிவைப்பு - ஆளுநர் மாளிகை






