கோவை பி.எஸ்.ஜி மேலாண்மை கல்லூரியில் நடைபெற்ற ஓணம் பண்டிகை விழா

கோவை பி.எஸ்.ஜி மேலாண்மை கல்லூரியில் நடைபெற்ற ஓணம் பண்டிகை விழாவில் கல்லூரி மாணவிகள் கேரள பாரம்பரிய உடையணிந்து செண்டை மேளம் முழங்க அத்தப் பூ கோலமிட்டு மகாபலியை வரவேற்றனர்.

 

கேரளாவில் மிக பிரம்மாண்டமாகக் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை தென் தமிழகத்திலும் சிறப்பாகக் கொண்டாடப்படும் விழா ஆகும். இந்நிலையில் கோவை பி.எஸ்.ஜி.மேலாண்மை கல்லூரியில் ஓணம் விழா கல்லூரி மாணவ,மாணவிகள் சார்பாக வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

கல்லூரியின் இயக்குனர் முனைவர் விஜயா தலைமையில் நடைபெற்ற விழாவில் கல்லூரி மாணவிகள் கேரள பாரம்பரிய உடையணிந்து செண்டை மேளம் முழங்க அத்தப் பூ கோலமிட்டு மகாபலியை வரவேற்றனர்.

அதனை தொடர்ந்து கேரள பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளான கும்மி கொட்டுதல், செண்டை மேளம், உறி அடித்தல், கயிறு இழுக்கும் போட்டி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.இந்நிகழ்சியில் கல்லூரி பேராசிரியர்கள், துறைத் தலைவர்கள், மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


Leave a Reply