சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கான வினாத்தாளில் தலித்துகள் தீண்டத்தகாதவர்கள் என குறிப்பிடும் வகையில் கேள்வி கேட்கப்பட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வினாத்தாளின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
இது குறித்து கேந்திரிய வித்யாலயா சம்பத்திடம் விளக்கம் கேட்டபோது இப்படியான வினாத்தாள் எங்கு அமைக்கப்பட்டது என அனைத்து கேள்விகளுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆறாம் வகுப்பு புத்தகத்தில் பன்முகத்தன்மை மற்றும் பாகுபாடு என்ற பாடத்தில் தலித் என்பது தாழ்ந்த சாதியாக கருதப்படுகிறது என்றும், இஸ்லாமியர்கள் தங்களது பெண் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப விரும்பவில்லை என்றும் கருத்து நிலவுகிறது என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
மேலும் டாக்டர் அம்பேத்கர் தலித் மக்களின் தலைவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மாணவர்கள் மனதில் நஞ்சை விதைக்கும் இத்தகையப் பகுதிகள் நீக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.






