குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் செல்லவுள்ள விமானம் பாகிஸ்தான் வான் வெளியில் செல்ல மறுப்பு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்திய குடியரசுத் தலைவரின் விமானத்திற்கு அனுமதி மறுப்பு என்று பாகிஸ்தான் அமைச்சர் குரேஷி தகவல் தெரிவித்திருக்கிறார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான பதற்றநிலை இருந்து வரக்கூடிய நிலையில் இதனை மேலும் மேலும் பெரிதாக கூடிய விதமாக இரு நாட்டு நல்லுறவை விலக்க வேண்டும் என்ற நோக்கிலேயே பாகிஸ்தான் செயல்பட்டு வருகிறது என்பது தான் இதன் மூலமாக கருதப்படுகிறது.
ஏற்கனவே தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு இரு நாடுகளுக்கு இடையேயான சமூக நிலையானது சுமூகமாக இல்லாமல் இருந்து வந்த நிலையில் அதை தொடர்ந்து அபிநந்தன் விவகாரம் அதை தொடர்ந்து நடைபெற்று வரக்கூடிய 370 உள்ளிட்ட பல்வேறு காரணங்களை காட்டி இந்தியாவின் மீது பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவது ஒரு பக்கம் இருந்தாலும் வான்வெளி கைவிடாமல் தற்போது அவர்கள் மறுப்பு தெரிவித்து வருகின்றார்கள்.
குறிப்பாக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வதற்கு பாகிஸ்தான் வழியாக செல்வது தான் வழக்கமாக இருந்து வந்தது. ஆனால் இந்த இரு நாட்டு நல்லுறவு இல்லாத சூழ்நிலையில் அந்த வான்வெளி பயன்பாட்டினை தொடர்ந்து பாகிஸ்தான் அரசு மறுத்து வந்தது.
குறிப்பாக இந்தியாவின் அனைத்து விமான நிலையங்களுக்கும் தடை இருந்த நிலையில் முக்கியமான விமான போக்குவரத்துக்கு மட்டும் அனுமதி இருந்து வந்தது. தற்போது அதுவும் முடங்கியுள்ளது. குடியரசு தலைவர் பாகிஸ்தான் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வான்வெளியில் பாகிஸ்தான் வெளியே செல்லவிருந்த நிலையில் பாகிஸ்தான் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.