ரயிலை கவனிக்காமல் கடக்க முயன்ற பெண் உயிர் தப்பினார்!

கர்நாடகாவில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் வந்ததால் சாதுர்யமாக செயல்பட்டு பெண்ணொருவர் உயிர் தப்பினார். குல்பர்கா மாவட்டத்தில் ரயில் நிலைய மேடையில் இருந்து இறங்கி பெண்ணொருவர் ரயில் வருவதை கவனிக்காமல் தண்டவாளத்தை கடக்க முயன்றார்.

 

பின்னர் ரயில் அருகே வருவதை உணர்ந்த பெண் உடனே ரயில் தண்டவாளத்தில் படுத்து கொண்டார். ரயில் சென்றதும் எந்தவித காயமும் இன்றி அவர் வெளியே வந்தார். இதனை அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்துள்ளார்.


Leave a Reply