சுங்கச்சாவடி கட்டண உயர்வுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்!

சுங்கச்சாவடிகளில் அமல்படுத்தப்பட்டுள்ள கட்டண உயர்வை கண்டித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அது சுங்கச்சாவடி கட்டண உயர்வு நடுத்தர மக்கள் மற்றும் சரக்கு போக்குவரத்து மனிதர்களை பெரிய அளவில் பாதிக்கும் என்றும் சுங்கச்சாவடிகளில் அடிப்படை பராமரிப்பு வசதிகள் மேம்படுத்தாமல் கட்டணத்தை ரகசியமாக உயர்த்துவது அரசின் கொள்கை எனவும் விமர்சித்திருக்கிறார். சுங்கச்சாவடிகள் மக்களின் நலனை சாகடிப்பதாக இருக்கக் கூடாது எனவும் எனவே கட்டண உயர்வை தமிழக அரசு கைவிட வேண்டும் எனவும் முக ஸ்டாலின் கூறியுள்ளார்.


Leave a Reply