--- --:--:-- --

அரசு பள்ளி ஆசிரியர்கள் சொத்துகளை முறையாக பராமரிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

dpi_710x400xt

அரசுப் பள்ளிகளில் பணியாற்றுபவர்களின் சொத்து விபரங்களை பராமரிக்க வேண்டும் என கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்திருக்கிறது. அனைத்து முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வி துறை இயக்குனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கக் கூடிய அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை முறையாகப் பராமரிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அதில் ஏதேனும் முரண்பாடுகள் நிகழ்ந்தால் சம்பந்தப்பட்ட பணியாளர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளைப் போன்று நடுநிலை மற்றும் தொடக்கப் பள்ளிகளிலும் பயோமெட்ரிக் வருகைப்பதிவு பின்பற்றவேண்டும் என சார்நிலை அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon