காஷ்மீர் விவகாரத்தில் ராகுல் ஏதும் அறியாத சிறுவன்!

காங்கிரஸ் தலைவர்களை 370-வது சட்டப்பிரிவை ஆதரவாளர்கள் என்று அழைத்தால் போதும் அவர்களை மக்கள் பார்த்துக் கொள்வார்கள் என காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார். காஷ்மீர் பிரச்சினையில் காங்கிரஸ் இதுவரை தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை என சாடினார்.

 

வரவிற்கும் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியினர் 370 ஆவது சட்டப்பிரிவு ஆதரிப்பார்கள் என்று மற்றவர்கள் சொன்னால் போதும் அவர்களை பொதுமக்கள் காரணிகளால் தாக்குவது உறுதி என்று எஸ்பி மாலிக் தெரிவித்துள்ளார்.

காஷ்மீருக்கு அந்தஸ்து அளிக்கும் 370 நீக்கப்பட்ட விஷயத்தில் ராகுல்காந்தி ஏதுமறியாத சிறுவன் போன்று நடந்து கொண்டதாக விமர்சித்துள்ளார். ஜம்மு-காஷ்மீர் வளர்ச்சிக்காக மிகப்பெரிய அறிவிப்புகளை மத்திய அரசு விரைவில் வெளியிட உள்ளதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.

 

சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டாலும், ஜம்மு காஷ்மீர் மக்களின் தனித்துவமான கலாச்சாரம் மற்றும் அடையாளங்கள் தொடர்ந்து பாதுகாக்கப்படும் என தெரிவித்தார். ஜம்மு காஷ்மீரில் அடுத்த 3 மாதங்களுக்குள் 50,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் எனவும் ஆளுநர் . மாலிக் தெரிவித்துள்ளார்.


Leave a Reply