எடப்பாடி பழனிசாமி முதற்கட்டமாக பிரிட்டன் சென்றடைந்தார்!

வெளிநாட்டு சுற்றுப் பயணத்தின் முதல் கட்டமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று மாலை பிரிட்டன் சென்றடைந்தார். வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் விதமாக முதலமைச்சர் இங்கிலாந்து அமெரிக்கா துபாய் ஆகிய மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

 

நேற்று காலை சுமார் 10 மணி அளவில் சென்னையில் இருந்து எமிரேட்ஸ் விமானம் மூலம் துபாய் புறப்பட்ட அவர் அங்கிருந்து மாலை சுமார் 6.30 மணி அளவில் லண்டன் சென்று சேர்ந்தார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மூன்றுநாட்கள் லண்டனில் தங்கியிருக்கும் எடப்பாடி. பழனிசாமி அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

 

அப்போது சுகாதாரம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. செப்டம்பர் 2 ஆம் தேதி அமெரிக்கா செல்லும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அங்கு. சான்பிரான்சிஸ்கோ, நியூயார்க் ஆகிய நகரங்களுக்கு சென்று முதலீட்டாளர்களை சந்திக்கிறார். அங்கு சென்று அமெரிக்க வாழ் தமிழர்களுடன் கலந்துரையாடுகிறார்.

பின்னர் அங்கிருந்து துபாய் செல்லும் முதலமைச்சர் செப்டம்பர் 8 மற்றும் 9 ம் தேதிகளில் துபாய் தொழில் முனைவோர் ஆலோசனை கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். பிரிட்டன் மற்றும் அமெரிக்காவிலும் தமிழர்களை முதலமைச்சர் சந்தித்து பேசியிருக்கிறார்.

 

இரண்டு வார கால சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு முதலமைச்சர் பழனிசாமி செப்டம்பர் 10-ம் தேதி சென்னை திரும்ப இருப்பதாக தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply