--- --:--:-- --

சாலமன் பாப்பையா மறைவு தமிழ்க்கூறும் நல்லுலகிற்கே மாபெரும் இழப்பாகும் – அமைச்சர் ராஜ்மோகன்

01

சாலமன் பாப்பையா மறைவுக்கு அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், “தாங்க முடியாத துயரம்! ​பத்மஸ்ரீ, முனைவர், பேராசிரியர், பட்டிமன்றப் பிதாமகர் சாலமன் பாப்பையா மறைவு தமிழ்க்கூறும் நல்லுலகிற்கே மாபெரும் இழப்பாகும். ​கல்லூரியில் பயிற்றுவித்த தமிழை, பட்டிமன்றங்கள் வாயிலாகப் பட்டிதொட்டியெங்கும் கொண்டு சென்று புகழின் உச்சிக்கு உயர்த்திய மாண்புடையவர். ​

 

 

தன்னுடைய இறுதி மூச்சு வரை இலக்கிய உலகில் தனி முத்திரையைப் பதித்தவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உலகத் தமிழர்களுக்கும் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் கண்ணீர் அஞ்சலியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று அந்த பதிவில் கூறியுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon