சாலமன் பாப்பையா மறைவு தமிழ் சமூகத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு – தமிழிசை
சாலமன் பாப்பையாக மறைவுக்கு தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், “மரியாதைக்குரிய சாலமன் பாப்பையா மறைவு தமிழ் சமூகத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. தீபாவளி பட்டாசு வெடிகளோடு பட்டிமன்ற வெடி சிரிப்புகளையும் அனுபவித்துக் கொண்டு இருந்தோம்.
பொங்கல் என்று பொங்கலை சுவைப்பது போலவே பொங்கி வரும் அவர் பட்டிமன்றங்களையும் சுவைத்துக் கொண்டிருந்தோம். அது மட்டுமல்ல பத்மஸ்ரீ விருதுக்காக அவரைப் பற்றி பற்றிய தகவல்களை சேகரிக்கும் பொழுது அவர் ஆரம்ப காலத்தில் இருந்து இன்று வரை அவர் கலந்து கொண்டிருக்கின்ற நிகழ்ச்சிகளில் அத்தனை அழைப்பிதழ்களையும் பத்திரமாக சேகரித்து வைத்திருக்கிறார் என்ற செய்தி உண்மையிலேயே வியப்பான ஒன்று.
அழைப்பவர்களையும் மதித்து அழைப்பிதழையும் மதித்து வைத்திருக்கிறார் என்பது ஒரு அரிதான குணம் தான்.. எளிய தமிழை பழகு தமிழாக இல்லங்களுக்கு கொண்டு சென்றதில் சாலமன் பாப்பையாவுக்கு தனி இடம் உண்டு…. பத்மஸ்ரீ பட்டத்திற்கு முழு தகுதியான அவருக்கு பத்மஸ்ரீ கொடுத்து அழகு பார்த்தது மத்திய மோடி அரசு. என் தந்தை குமரி அனந்தன் சொல்வார்கள் அவர்களெல்லாம் ஒன்றாக பட்டிமன்றம் பேசியிருக்கிறோம் என்று அடிக்கடி சொல்வார்கள். ஆக அப்படிப்பட்ட ஒரு தமிழறிஞரை நாம் இழந்து தவிக்கிறோம்.. தமிழும் தவித்துக் கொண்டிருக்கிறது…” என்று அதில் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




