--- --:--:-- --

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 117 அடியாக உயர்வு!

69847

மேட்டூர் அணை நீர்மட்டம் 117 அடியை எட்டிய நிலையில், தொடர்ந்து வினாடிக்கு 18 ஆயிரம் கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக கர்நாடக அணைகள் நிரம்பியது காரணமாக பெரும்பாலான அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது.

 

இதனைத்தொடர்ந்து மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்நிலையில் மழை குறைந்த அளவு வரும்பொழுதும் கர்நாடக அணைகளில் இருந்து தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

 

தற்போது மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 18 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், நீர்மட்டம் 113 அடியாக நீர் இருப்பு 88.79 ஒன்பது ஐந்து டிஎம்சி ஆகவும் உள்ளது. அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீரும்., கிழக்கு மேற்குகால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon