காஷ்மீரில் தாக்குதல் நடத்த 100 க்கும் அதிகமான தீவிரவாதிகள் இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை!

ஜம்மு காஷ்மீருக்குள் ஊடுருவ தயாராக பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன், ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளும் எல்லையில் தயார் நிலையில் இருப்பதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து உளவுத்துறை விடுத்துள்ள எச்சரிக்கையில் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தீவிரவாதிகள், ஆப்கானிஸ்தான் மற்றும் நூற்றுக்கும் அதிகமான தீவிரவாதிகளும் தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளது.

 

மேலும் ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு படையினர் முழு அளவில் பயிற்சி அளித்து இருப்பதாகவும் உளவுத்துறை எச்சரித்துள்ளது இந்த தீவிரவாதிகள் காஷ்மீர் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே பள்ளத்தாக்கில் பதுங்கி இருப்பதாகவும் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து அங்கு சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தி உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கவும் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.

 

மேலும் இந்த தீவிரவாதிகள் முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்தவும், நாசவேலைகளில் ஈடுபடவும் தயார் நிலையில் இருப்பதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது. இதை அடுத்து எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்தும் பணியில் ஈடுபட உளவுத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.


Leave a Reply