ஜம்மு காஷ்மீரில் தொகுதிகளை வரைமுறைப்படுத்தும் பணிகள்!
ஜம்மு-காஷ்மீர் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தொகுதிகள் முறைப்படுத்தும் பணிகள் அக்டோபர் 31-ஆம் தேதிகளில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது, அடுத்து வரும் அக்டோபர் 31-ஆம் தேதி முதல் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக செயல்பட உள்ளது.
இந்த நிலையில் அதன் பிறகு அந்த தொகுதிகளை வரை முறைப்படுத்தும் பணிகள் தொடங்கும் என்றும் தேர்தல் ஆணையத்தின் கீழ் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையிலான குழு பணிகளை மேற்கொள்ளும் எனவும், தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டத்தின் படி 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த பணிகள் நடைபெறும் என்று 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, ஜம்முவில் மக்கள்தொகை 69 லட்சத்து ஏழாயிரத்து அறுநூற்று இருபத்து மூன்றாகவும், காஷ்மீரில் மக்கள் தொகை 53 லட்சத்து 50 ஆயிரத்து 711 ஆகவும் இருந்தது.
தற்போது அங்கு 107 சட்டமன்ற தொகுதிகள் உள்ள நிலையில் அது 114 ஆக உயர்த்தப்பட உள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் 24 தொகுதிகள் ஒதுக்கப்பட உள்ளன. கடைசியாக ஜம்மு-காஷ்மீரில் 1995,1996 ஜம்மு-காஷ்மீர் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 47 மற்றும் 141 இன்படி தொகுதிகளை முறைப்படுத்தும் பணிகள் நடைபெற்றன., என்பது குறிப்பிடத்தக்கதுன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




