பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக பூட்டான் செல்கிறார்!

பிரதமர்மோடி இன்று பூட்டான் செல்கிறார். இதை இரண்டு நாள் பயணமாக மேற்கொள்ள போகிறார். தான் மேற்கொள்ளும் பயணம் குறித்து பிரதமர் மோடி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் இந்தியா-பூட்டான் இடையிலான நட்பு ஆழமானது பழமையானது என்று மோடி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். பூட்டான் நம்பகமான நட்பு நாடாகவும் மற்றும் அண்டை நாடாகவும் விளங்குவதாக மோடி தெரிவித்துள்ளார்.

 

தனது இந்த பயணத்தின் போது இரு நாடுகளின் எதிர்காலம் மேலும் வலுப்பெறும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.பூட்டான் சென்று பிரதமர் மோடி பூட்டான் மன்னர் மற்றும் பிரதமர் உள்ளிட்ட தலைவர்களை சந்திக்க உள்ளதாகவும், சந்தித்து நடக்க போகும் பேச்சு வார்த்தை பலனுள்ளதாக இருக்கும் என்றும் பிரதமர் மோடி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

 

இந்த பேச்சு வார்த்தை நடத்துவதன் பயனாக இந்தியா, பூட்டான் இடையே ராணுவ ,பாதுகாப்புத்துறை, நீர் மின்னுற்பத்தி, மின்சார கொள்முதல், வர்த்தகம், கலாச்சாரம், பொருளாதாரம் ஆகிய ஆறு துறை ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. பூடான் கல்வித்துறை சார்பில், டெல்லி, மும்பை, கான்பூர் ஐ.ஐ.டிக்களுடனும், சில்சார் என்.ஐ.ஐ.டி.யுடனும் நான்கு தனித்தனி ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன.


Leave a Reply