டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து

முன்னாள் அமைச்சர் அருண் ஜெட்லி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் முதல் தளம் மற்றும் இரண்டாம் தளம் தீயினால் சூழப்பட்டு உள்ளது.

 

இதையடுத்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனால் தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் மருத்துவமனையை விரைவாக அடைந்தனர். தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க 34 வாகனங்களை கொண்டு வந்துள்ளனர்.

 

தீ விபத்திற்கான காரணம் பற்றி விசாரிக்கப்பட்டதில் தீ விபத்திற்கு மின்கசிவு காரணமாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதே மருத்துவமனையில் கடந்த மே மாதம் தரைதளத்தில் தீவிபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த விபத்தில் ஏற்பட்டுள்ள உயிர்ச்சேதம் உள்ளிட்ட விவரங்கள் ஏதும் இன்னும் தெரியவில்லை.


Leave a Reply