இளம் இயக்குனர்களின் இயக்கத்தில் முன்னணி நடிகர்கள் நடிப்பதால் திரைப்பட துறையில் இளம் தலைமுறையினர் அதிகம் சாதிக்க வாய்ப்புள்ளது – பிரபல திரைப்பட நடிகர் டேனியல்

இளம் இயக்குனர்களின் இயக்கத்தில் முன்னணி நடிகர்கள் நடிப்பதால் திரைப்பட துறையில் இளம் தலைமுறையினர் அதிகம் சாதிக்க வாய்ப்புள்ளதாக பிரபல திரைப்பட நடிகர் டேனியல் கோவையில் தெரிவித்துள்ளார்.

கம்ப்யூட்டர் மற்றும் எலக்ட்ரானிக் துறையில் பல்வேறு புதிய நவீன கருவிகள் உற்பத்தி மற்றும் விற்பனையில் முன்னணி நிறுவனமான ஜீப்ரானிக்ஸ் நிறுவனத்தின் புதிய விற்பனை மையம் கோவை புரூக்பீல்ட்ஸ் மாலில் துவங்கப்பட்டது. இதற்கான துவக்க விழாவில் கலந்து கொண்ட பிரபல நடிகர் டேனியல் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது,அவர் தற்போது நவீன வகை சவுண்ட் ஸ்பீக்கர்ஸ்,புளூடூத் மற்றும் கம்ப்யூட்டர் தொடர்பான சாதனங்கள் விற்பனையில் இந்த நிறுவனம் தற்போது முன்னிலையில் உள்ளதாகவும்,அதுவும் குறிப்பாக கோவையில் இந்த மையம் துவங்கியதில் தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாக கூறிய அவர்,தற்போது இளம் இயக்குனர்களின் இயக்கத்தில் முன்னனி நடிகர்கள் நடிப்பதால் இளம் தலைமுறையினருக்கு அதிகம் வாய்ப்புகள் கிடைப்பதோடு திரைத்துறையில் பெரும் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது ளதாக அவர் தெரிவித்தார்.


Leave a Reply