மாநகராட்சி பள்ளியில் 1991 ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்களின் சந்திப்பு !!!

மாநகராட்சி பள்ளியின் முன்னாள் மாணவர்கள் உயிர்காக்க உதிரம் கொடுத்து இன்றைய மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.கோவை உடையாம்பாளையம் மாநகராட்சி பள்ளியில் 1991 ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி, பள்ளி வளாகத்தில் இன்றைக்கு நடைபெற்றது.

முன்னாள் மாணவர்கள், வசந்த காலம் 1991 என்ற பெயரை வைத்து இன்றைய மாணவர்களுக்கு உயிர்காக்க உதிரம் கொடுப்பதன் அவசியத்தை உணர்த்தும் வண்ணம் 100 க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர்.

பள்ளி வளாகத்தில் இந்நாள் மாணவர்களுக்கு தனி மனித ஒழுக்கத்துடன் உடல் ஆரோக்கியம் இருந்தால் மட்டுமே ஒருவர் ரத்த தானம் வழங்க முடியும் எனவும், அவரிடம் எடுக்கப்பட்ட ரத்தம் எப்படி நோயாளிக்கு பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் ரத்த வங்கி தலைமை மருத்துவர் மங்கையர்கரசி விளக்கினார்.

இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு செய்த முன்னாள் மாணவர் சின்னச்சாமி பேசுகையில் 1991ஆம் ஆண்டு படித்த மாணவர்கள் அனைவரும் இன்று வரை நண்பர்களாக இருந்து குடும்ப சுக துக்க நிகழ்ச்சிகளில் கலந்து வருவதாக தெரிவித்தார். தாங்கள் படித்த பள்ளிக்கும் , மாணவர்களுக்கும் தேவையான உதவிகள் செய்து வருவதாகவும், வசந்த காலம் 1991 என்ற பெயரில் விரைவில் அறக்கட்டளை தொடங்கி படிக்கும் குழந்தைகளுக்கு உதவி செய்ய இருப்பதாக கூறினார்.


Leave a Reply