திருப்பூருக்கு கணவரைத் தேடி சென்ற பெண் மாயம் ! மீட்டுத் தருமாறு பெண்ணின் பெற்றோர் காவல்நிலையத்தில் கண்ணீர் மல்க புகார் மனு !!

இராமநாதபுரம் மாவட்டம் சூரங்கோட்டை ,முதுனாள் கிராமத்தை சேர்ந்த கோபால் என்ற கோபாலன் கடந்த 13- 8-2019 அன்று இராமநாதபுரம் B2 பஜார் காவல் நிலையத்தில் தன் மகளை மீட்டுத்தருமாறு புகார் மனு ஒன்று அளித்துள்ளார்.இந்தப் புகார் மனுவில் அவர் அளித்துள்ள தகவல்கள் இவரது மகள் பானுப்பிரியா கடந்த 6 வருடங்களுக்கு முன்பு சிவகாசியை சேர்ந்த பாண்டி மகன் காளீஸ்வரன் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

 

இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு பானுப்பிரியாவின் கணவர் கடந்த 20 நாட்களுக்கு முன்பு திருப்பூர் வேலைக்கு செல்வதாக கூறி சென்றுள்ளார் மேலும் அங்கு சென்ற அவர் எந்த ஒரு தகவல் தகவல்களும் கிடைக்காததால் அவரது மனைவி பானுப்பிரியா கடந்த 12 நாட்களுக்கு முன்பு அவரது கணவர் காளீஸ்வரனை நேரடியாக சென்று சந்தித்துள்ளார்.

இந்நிலையில் மேலும் அவர் கணவரை சந்தித்து விட்டதாகவும் அவர் வர மறுத்து வருவதாகவும் நான் வந்தால் கணவருடன் தான் வருவேன் என்று கடந்த ஐந்தாம் தேதி காலை 9 மணி அளவில் பானுப்பிரியாவின் பெற்றோரிடம் பேசியுள்ளார் என்று பெற்றோர்கள் கூறுகின்றனர், இந்நிலையில்தான் பானுப்பிரியாவின் பெற்றோர்கள் கடந்த 5 ஆம் தேதிக்கு பிறகு எனது மகளின் செல்போன் அழைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளது.

இவர்கள் கூறுவது நான் மற்றும் எனது மனைவி வயது முதிர்ந்து வாழ்ந்து வரும் நிலையில் இரு பெண் குழந்தைகளை பேணி காத்து வருவது மிகவும் கஷ்டமாக இருக்கிறது ஆனால் தாயின் நிலைமையும் தெரியவில்லை தந்தையின் நிலைமையும் தெரியவில்லை இந்நிலையில் தான் எனது மகளையும் மருமகனையும் காவல்துறை மீட்டுத் தருமாறு நான் புகார் அளித்துள்ளேன் என்று கூறியுள்ளார்.


Leave a Reply